பாலியல் தாக்குதலில் கூடுதல் விழிப்புணர்வால் கூடும் வழக்குகள்... நம்பிக்கை தரும் நீதிமன்ற தீர்ப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பாலியல் தாக்குதல் குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், பெண் குழந்தைகள் துணிந்து புகார் அளித்து வருவதால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது குறித்து கடந்த 2015ம் ஆண்டு அதிகமான புகார்கள் எழுந்தன.

2015ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்பாக 28 வழக்குகள் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டன. 2016ம் ஆண்டில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பாக 29 வழக்குகளும், 2017ம் ஆண்டு 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டில் 27 வழக்குகள் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டில் 25 வழக்குகள் பதிவாகின. 2020ம் ஆண்டு 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2021ம் ஆண்டில் போக்சோ பிரிவின் கீழ் 89 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 75 வழக்குகள் பாலியல் பலாத்கார வழக்காகவும், 14 வழக்குகள் தவறான நோக்கத்துடன் அணுகுதல் என்ற முறையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை போக்சோ பிரிவின் கீழ் 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகள் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலுக்காக பதிவானவையாகும்.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மற்றும் அதுதொடர்பான புகார்கள், வழக்குகள் கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதேநேரம் பாலியல் தாக்குதல் சம்பந்தமான வழக்குகளை தீவிர விசாரித்து குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை வாங்கி தர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: