கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு பங்கேற்பு

சென்னை: கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கலைஞரின் நினைவிடத்தில் மூத்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். கலைஞர் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது உருவபடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் தற்போது மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கிட்டத்தட்ட 10,000-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சீருடை அணிந்து அமைதி பேரணியை தொடங்கியுள்ளனர். இந்த பேரணியானது ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அண்ணா சாலையில் இருந்து புறப்பட்டு வாலாஜா சாலை வழியாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தை வந்து அடைந்தனர்.  முத்தமிழறிஞர் கலைஞர் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் 3 இடங்களில் மாராத்தான் போட்டிகள் நடைபெற்றன.

அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு தற்போது ஓமந்தூரார் தோட்டத்தில் நடைபெறும் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞரின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு சென்றிருக்கிறார். திமுக சார்பில் மாநில முழுவதும் கலைஞரின் நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கலைஞரின் தமிழ்த்தொண்டு, சமுதாய தொண்டு  அவரது சமூக சீர்த்திருத்தத்தை போற்றும் வகையில் பல்வேறு கவியரங்குகள், கருத்தரங்கள் சென்னையிலும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நடைப்பெற உள்ளன.

Related Stories: