திருத்தணி அருகே பரபரப்பு நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு பொதுமக்கள் வாக்குவாதம்

திருத்தணி:  திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே தொழுதாவூர் கிராமம் உள்ளது. இங்கு நடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த அருள்முருகன் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த ராம் கணேஷ் என்பவர் தோல்வியடைந்தார். இதனால் முன்விரோதம் ஏற்பட்டது. இதை மனதில் வைத்து, இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள், அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டிருப்பதாவும், அவற்றை அகற்ற வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் ராம் கணேஷ் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இதைடுத்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹசரத் பேகம் தலைமையில் அதிகாரிகள், வட்டாட்சியர் வெண்ணிலா, துணை வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் டி எஸ்பி விக்னேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை ராஜு மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் இரண்டு பேருந்துகள் தயாராக வைக்கபப்ட்டிருந்தன.    

இதை பார்த்ததும் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ‘எங்கள் கிராமத்தில் ஏரி வரத்து கால்வாய் உள்பட்ட 30க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.  அனைவரும் வீடு கட்டி வசித்து வருகிறோம். அந்த வீடுகளில் நீர் நிலைகள் இல்லை. எங்கள் வீடுகளில் மட்டும் நீர் நிலை உள்ளதா?   திருவள்ளுவர் கலெக்டர் அலுவல்கம் ,எஸ்பி அலுவலகம் ,அரசு கட்டிடங்கள் திருவள்ளூர் ஏரியில் தான் கட்டப்பட்டது. இதேபோல் திருத்தணி பட்டாபிராமபுரம் ஏரியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்பு, வட்டாட்சியர் சுற்றுலா மாளிகை ஆகியவை உள்ளது. இந்த அரசு அலுவலகங்கள் நீர் நிலையில் தான் கட்டப்பட்டது. இத்தனை பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதே என பொதுமக்கள் அதிகாரிகளை பார்த்து ஆவேசமாக கேள்வி எழுப்பினர். மேலும் குழந்தைகள் உட்பட பலரும் கண்ணீர் மல்க கதறி அழுதனர். கெஞ்சினர். ஆனால் அதிகாரிகள் இது சென்னை உயர் நீதி மன்ற உத்தரவு .அதனால் எங்களால் எதுவும் செய்ய இயலாது என்று கூறி கட்டிடங்களை ஒன்றன் பின்  ஒன்றாக இடிக்கத் தொடங்கினர்.   இதனால் அதிகாரிகள் பொதுமக்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Related Stories: