சுதந்திர இந்தியாவில் உணவு, உப்புக்கு வரி போட்ட ஒரே அரசு பாஜ அரசு தான்: அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

சின்னாளபட்டி: சுதந்திர இந்தியாவில் உப்புக்கும், உணவு பொருட்களுக்கும் வரி போட்ட ஒரே அரசு பாஜ அரசு தான் என அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டினார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ரூ.3.45 கோடி மதிப்பில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பேட்டி; இந்தியாவில் சுதந்திரம் வாங்கிய பின்பு உப்புக்கும், உணவு பொருட்களுக்கும் வரி போட்ட ஒரே அரசு பாஜ அரசு தான். நீட் தேர்வை கொண்டு வந்து தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை அழித்த பாஜ அரசு, தற்ேபாது தங்களது கட்டுப்பாட்டில் செயல்படும் பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் தமிழக மாணவ்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

றிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளபட்டி காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் சுற்றியுள்ள கிராம மாணவ, மாணவியர்கள் படித்து வந்தனர். தற்போது க்யூட் தேர்வால் இவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு நாகலாந்து, மணிப்பூர், ஒரிசா, பீகார், உத்தரபிரதேசம் என வடமாநிலங்களை சேர்ந்த சேர்ந்த மாணவர்கள் தான் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கும் என கூறி வருகிறார். அமலாக்கத்துறையை வைத்து கொண்டு பாஜ அரசு பழிவாங்கும் நிலையை கையில் எடுத்தால் இலங்கை நிலைமை தான் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: