அள்ளூர் கிராமத்தில் தேங்கிய மழைநீரால் மக்கள் பாதிப்பு: பொதுமக்கள் கோரிக்கை

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அள்ளூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு பட்ட  பூதங்குடி ஊராட்சி அள்ளூர் கிராமத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு எதிரே குடியிருப்புகள் உள்ள பகுதியில் சில தினங்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் அவதியடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கனமழையின் போது இந்த கிராமத்தில் தண்ணீர் தேங்குவது தொடர்கதையாக உள்ளது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். மாவட்ட நிர்வாகம் அள்ளூர் கிராமத்தில் மழைநீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: