பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் வரத்து குறைவால் விற்பனை மந்தம்-கால்நடை வளர்ப்போர் பாதிப்பு

பொள்ளாச்சி :  பொள்ளாச்சியில்  நேற்று நடந்த மாட்டுச்சந்தையில் மாடு வரத்து குறைவால் விற்பனை மந்தமாக நடந்தது. பொள்ளாச்சியில்  வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில்  மாட்டு சந்தை நடைபெறுகிறது. இதற்காக  உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள்  விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதில் கடந்த 2 வாரமாக நடந்த சந்தை  நாளின்போது வெளி மாநிலங்களில் இருந்தும் மாடுகள் வரத்து  வழக்கத்தைவிட சுமார் 2500க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டது.

நேற்று நடந்த சந்தையின் போது ஆந்திரா, கர்நாடகா மாநில பகுதியிலிருந்து ஓரளவு வரபெற்றாலும்,  தமிழகத்தின் சில மாவட்டங்களில் பரவலான மழையால் உள்ளூர் மாடுகள் வரத்து  குறைவானது. இதானல் கேரள வியாபாரிகள் குறைந்து மாடு விற்பனை மந்தத்தாலும், பரவலான மழையாலும் அதிகபட்சமாக  ரூ.1.20 கோடிக்கே வர்த்தகம் நடைபெற்றது.

சேறும், சகதியால் அவதி

பொள்ளாச்சியில் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த மழையால், நேற்று சந்தையின் பெரும்பகுதி சேறும் சகதியுமாக  காணப்பட்டது. இதனால், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகின்னர்

மேலும், சேற்றிலேயே வியாபாரிகள் நடந்து சென்ற அவலம்  ஏற்பட்டது. சிலர் தடுமாறி சேற்றில் விழுந்த சம்பவமும் நடந்தது. எனவே,  சந்தைக்குட்பட்ட பகுதியில், மழைக்காலத்தில் அவதிப்படுவதை தடுக்க,  கான்கிரீட் சாலை அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள்  பலர் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: