சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தாழ்வான மின் கம்பியால் உயிர்பலி அபாயம்

கும்மிடிப்பூண்டி: தாழ்வாக செல்லும் மின் கம்பியால் உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. கும்மிடிப்பூண்டி  பஜாரில் துணை மின் நிலையம் உள்ளது.  இதிலிருந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, தேர்வழி, கம்மரப்பாளையம், வேற்காடு, புதுகும்மிடிப்பூண்டி, பெத்திக்குப்பம், ஆத்துப்பாக்கம், வழுதலம்பேடு, ரெட்டம்பேடு், பட்டுபுள்ளி, அப்பாவரம், ஏனாதிமேல்பாக்கம், சோழியம்பாக்கம் அயநெல்லுர், உள்ளிட்ட பல்வேறு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மக்கள் வசிக்கின்றனர்.  

இங்கு உள்ள மக்கள் மின்சாரத்தை பயன்படுத்தி மின் விசிறி, மிக்சி, கிரைண்டர், டிவி  உள்ளிட்ட  வீட்டு உபயோக சாதனங்களை மக்கள் தேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வேற்காடு சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மீன் கம்பி சுமார் ஒரு மாதகாலமாக தாழ்வான நிலையில் செல்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதனை சரிசெய்ய வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: