ராஜபாளையம் அருகே குடியிருப்பு பகுதியில் சிக்கிய சருகுமான்: 3 பாம்புகளும் சிக்கின

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே, கிருஷ்ணாபுரத்தில் குடியிருப்பு பகுதியில் சிக்கிய சருகுமான், 3 பாம்புகளை பிடித்து, வனப்பகுதியில் விடுவித்தனர்.ராஜபாளையம் அருகே, கிருஷ்ணாபுரம் கூட்டுறவு தொடங்க வேளாண்மை வங்கி பின்புறம் முட்புதரில் அபூர்வ விலங்கு ஒன்று திரிவதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் அளித்த தகவலின் பேரில், விலங்கு நல ஆர்வலர் மாரீஸ்கண்ணன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சென்று பார்த்த போது அரிய வகை சருகுமான் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் சருகுமானைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.

இதேபோல, மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பதுங்கியிருந்த கண்ணாடி வீரியன் பாம்பு, ஆலங்குளம் அண்ணா நகரில் இரண்டு வீடுகளுக்கு இடையே பதுங்கி இருந்த 8 அடி நீள நல்ல பாம்பு, பொன்னகரத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது வீட்டின் மாடிப்படிகளுக்கு அடிப்பகுதியில் பதுங்கி இருந்த, 4 அடி நீளமுள்ள கண்ணாடி வீரியன், ஆகியவற்றை மாரீஸ் கண்ணன் பிடித்தார். பின்னர் பாம்புகளை முடங்கியாறு அருகே உள்ள சப்பாணி புறம்பு என்ற வனப்பகுதியில் விடுவித்தனர்.

Related Stories: