இந்த இடத்துக்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன் கூத்தாநல்லூர் நகராட்சியின் நூதன விழிப்புணர்வு விளம்பரம்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

மன்னார்குடி: கூத்தாநல்லூர் நகராட்சியில் என்குப்பை- என் பொறுப்பு என்ற திட்டத்தின்கீழ் குப்பைகளை கண்ட இடங்களிலும் கொட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி நகராட்சி தலைவரால் வைக்கப்பட்டுள்ள வடிவேலுவின் கைப்புள்ள பேனர் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளில் \”என் குப்பை - என் பொறுப்பு\” என்ற திட்டத்தின் கீழ் பொது மக்களின் பங்களிப்புடன் கூடிய நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் முக ஸ்டாலினால் அண்மையில் துவக்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் அனைத்து தரப்பினரி டமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. நகர் மன்ற தலைவர் பாத்திமா பஷீரா தலைமையில், நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி முன்னிலையில் \”என் குப்பை - என் பொறுப்பு\” என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைபணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 7வது வார்டில் துவக்கப்பட்ட இந்த திட்டம் பொதுமக்கள் பங்களிப்புடன் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த திட்டம் செய்யப்படுத்தப்பட்ட வார்டுகளில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குப்பைகள் சேரும் இடங்கள் தூய்மை செய்யப்பட்டு அந்த இடத்தில் நகர் மன்ற தலைவர் பாத்திமா பஷீரா மரக் கன்றுகளை நட்டு விழிப்புணர்வு பதாகைகளை வைத்து வருகிறார்.கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு விளம்பர பதாகைகளில் திரைப்பட காமெடி நடிகர் வடிவேல் படம் அச்சிடப்பட்டு அதில் இந்த பார்டரை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச் சாக தான் இருக்கணும் என்ற அவரின் பிரபலமான காமெடி காட்சிகளை நினைவுபடுத்தும் வகையில், இந்த இடத்தில் \”குப்பையை கொட்ட நீயும் வரக் கூடாது ! நானும் வரமாட்டேன் \” என்ற வாசகங்கள் அச்சிடப் பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி நகர்மன்ற தலைவர் பாத்திமாபஷீரா வுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த பேனரானது வின்னர் என்ற திரைப்படத்தில் கைப்புள்ள கதா பாத்திரத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவராக நடித்துள்ள காமெடி நடிகர் வடிவேலு தெரிவிப்பதை போன்று அடங்கிய பேனரானது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய டிரெண்ட் ஆகி நகர் மன்ற தலைவர் பாத்திமா பஷீராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.இதுகுறித்து பூண்டி கலைவாணன் எம்எல்ஏவின் ட்விட்டர் பதிவு : மண்ணின் மைந்தர், தமிழக முதல்வரின் மாவட்டமான திருவாரூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட கூத்தாநல்லூர் நகராட்சி பகுதிகளில் \”என் குப்பை - என் பொறுப்பு\” என்ற திட்டம் குறித்து இதுபோன்ற வித்தியாசமான முயற்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரியது என பதிவிட்டுள்ளார்.

Related Stories: