ஆத்தூரில் வெண்டை சாகுபடி அமோகம்; ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்பப்படுகிறது

சின்னாளபட்டி: ஆத்தூர் பகுதியில் வெண்டைக்காய் சாகுபடி அமோகமாக உள்ளது. இங்கு பறிக்கும் வெண்டைக் காய்களை திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். செம்பட்டி அருகே, ஆத்தூர் ஊராட்சியில் குறுகிய கால பயிரான வெண்டைக்காயை நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். வெண்டைக்காய் செடிகள் நன்கு வளர்ந்து காய்த்து குலுங்குகின்றன. பெண் தொழிலாளர்கள் வெண்டைக்காய்களை பறித்து 50 முதல் 55 கிலோ வரை பேக்கிங் செய்கின்றனர்.

லாரி, வேன்கள் மூலம் தினசரி திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்படுகின்றது. சராசரியாக பெண் தொழிலாளி ஒருவர் தினசரி 55 முதல் 60 கிலோ வரை காய்களை பறித்து கொடுத்து, கூலியாக ரூ. 250 முதல் 300 வரை பெற்றுக் கொள்கின்றனர்.வெண்டைக்காய் பறித்தால் கை, கால் அரிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.திண்டுக்கல்லில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: