நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மறுத்த பதிவாளர் உள்பட 3 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

திருவாருர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மருதங்காவெளி தோப்பை சேர்ந்தவர் இந்திராணி. இவர், தனக்கு சொந்தமான புஞ்சை நிலத்தை மகன் சக்திவேல் பெயருக்கு மாற்ற 2019 மே 3ம் தேதி  ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள முத்திரைத்தாளில் தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதிக்கொடுத்து அதனை பதிவு செய்வதற்காக  ரூ.4,190 செலுத்தி இணைய தளம் மூலம் முத்துப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து தாயும், மகனும் அங்கு ஆஜரான போது இந்த சொத்து தொடர்பாக முத்துப்பேட்டை போலீசில் புகார் உள்ளதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என  கூறப்பட்டது. இதுதொடர்பான புகாரை விசாரித்த திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையம் நிலத்தை பத்திர பதிவு செய்ய மறுத்த பதிவுத்துறை தலைவர், மாவட்ட பதிவாளர், சார்-பதிவாளர் ஆகியோர் இழப்பீடாக ரூ.1லட்சம் வழங்கவும், ஆறு வாரத்திற்குள் செட்டில்மெண்ட் பத்திரம் பதிவு செய்து தரவும், வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: