கும்பகோணத்தில் ரூ.4.30 கோடிக்கு பருத்தி ஏலம்: விவசாயிகள் மகிழ்ச்சி

கும்பகோணம்: கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 4.30 கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. ஏலத்தில் கும்பகோணம், சுவாமிமலை, கபிஸ்தலம், திருப்பனந்தாள், சோழபுரம், நாச்சியார்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் பங்கேற்றனர்.

ஏலத்தில் பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்துக்கும், குறைந்தபட்சமாக ரூ.10,500-க்கும் விலைபோனது.விவசாயிகள் 2,324 லாட் பருத்தியை மறைமுக ஏலத்துக்கு கொண்டு வந்தனர். இதில் 9 வியாபாரிகள் கலந்துகொண்டு ரூ.4.30 கோடிக்கு பருத்தியை ஏலம் எடுத்தனர். தஞ்சை ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடந்தது. இந்த ஏலத்தில் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு லாபம் கிடைத்தால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: