தொடரும் மிக்-21 போர் விமான விபத்துகள் இருந்தது 1,200; இறந்தது 1,100: ராஜஸ்தான் விபத்தில் 2 விமானி பலி

புதுடெல்லி: ராஜஸ்தானில் மிக்-21 போர் விமானம் விபத்தில் சிக்கி, வெடித்து சிதறியதில் 2 போர் விமானங்கள் உயிர் இழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம், உடார்லாய் விமான தளத்தில் நேற்று முன்தினம் இரவு, விமானப்படைக்கு சொந்தமான மிக்-21  விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. 2 இருக்கைகள் கொண்ட இந்த பயிற்சி விமானம் இரவு 9.10 மணிக்கு திடீரென கீழே விழுந்து வெடித்து சிதறியது.

இதில், விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்தில் இறந்த விமானிகளின் பெயர்களை விமானப்படை நேற்று வெளியிட்டது. விங் கமாண்ட் எம்.ராணா, லெப்டினன்ட் அத்வித்தியா பால் ஆகியோர் விபத்தில் இறந்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விமானப்படையில் கடந்த 1964ம் ஆண்டு முதல் இடம் பெற்றுள்ள இந்த விமானங்கள், அடிக்கடி விபத்தில் சிக்கி உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இவற்றை 2025ம் ஆண்டுக்குள் படையில் இருந்து முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையில், 1964ம் ஆண்டில் இருந்து மொத்தம் 1,200 மிக்-21 போர் விமானங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் பல நேரடியாக ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டன.

மற்றவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டு புள்ளி விபரத்தின்படி, விமானப்படையில் 113 மிக்-21 விமானங்கள் மட்டுமே இந்திய விமானப்படையில், 1964ம் ஆண்டில் இருந்து மொத்தம் 1,200 மிக்-21 விமானங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் பல நேரடியாக ரஷ்யாவிடம் இருந்தும், மற்றவை இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன. கடந்த 2019ம் ஆண்டு புள்ளி விபரத்தின்படி, தற்போது விமானப்படையில் 113 மிக்-21 விமானங்கள் மட்டுமே இருக்கின்றன.

கடந்த 1970ம் ஆண்டில் இருந்து இதுவரையில் நடந்துள்ள இந்த விமானங்களின் விபத்துகளில் 170க்கும் மேற்பட்ட விமானப்படை விமானிகளும், 40 பொதுமக்களும் உயிர் இழந்துள்ளனர். 1966 முதல் 1984 வரையில் விபத்துகளின் மூலம் 840 மிக்-21 விமானங்களை விமானப்படை இழந்துள்ளது. மோசமான பராமரிப்பு, இன்ஜின் தோல்வி ஆகியவை இதற்கு காரணமாக அமைந்துள்ளன

இந்திய விமானப்படையில் புதிதாக சேர்க்கபட்ட ரபேல் போர் விமானங்களுடன், 2000 விமானங்கள் உள்ளன.

பறக்கும் சவப்பெட்டியை எப்போதான் நீக்குவீங்க...

பாஜ.வை சேர்ந்த அதிருப்தி எம்பி.யான வருண் காந்தி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதில், ‘பறக்கும் சவப்பெட்டியான  மிக்-21 போர் விமானங்களை, எப்போதுதான் படையில் இருந்து நீக்கப் போகிறீர்கள்?’ என்று ஒன்றிய அரசை கேட்டுள்ளார்.

Related Stories: