நீதிபதிகளை விமர்சிக்க ஒரு எல்லை உண்டு: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி: `நீதிபதிகளை விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு’ என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பீட்டர் மச்சாடோ என்பவர்,  `நாடு முழுவதும் கிறிஸ்தவ அமைப்புகள், பாதிரியார்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் விடுமுறை கால அமர்வில் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் கால தாமதம் செய்கிறது’ என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இதனை நேற்று விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட், சூர்யகாந்த் அமர்வு, `இதற்கு முன் அமர்வில் இருந்த நீதிபதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், வழக்கை விசாரிக்க முடியவில்லை. ஆனால், உச்ச நீதிமன்றம் தாமதிப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகிறது. நீதிபதிகளை விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு,’ என்று எச்சரித்தனர். ‘இது போன்ற செய்திகளை யார் கொடுப்பது? இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்காவிட்டால், இன்னும் தாமதிப்பதாக அடுத்த செய்தியை வெளியிடுவார்கள்,’ என்று வேதனையும் தெரிவித்தனர்.

Related Stories: