பசுவின் கோமியம் லிட்டர் விலை ரூ.4: சட்டீஸ்கர் அரசு கொள்முதல்

ராய்ப்பூர்: பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க பாஜ ஆளும் மாநிலங்கள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. காங்கிரஸ் ஆளும் சட்டீஸ்கரில் ‘கோதன் நியாய் யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து கிலோ ரூ.2க்கு மாட்டு சாணம் கொள்முதல் செய்யப்பட்டு, உரம் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம், கடந்த 2 ஆண்டுகளில் அரசுக்கு ரூ.143 கோடி வருமானம் கிடைத்துள்ளது. பசுவின் கோமியத்தையும் ஒரு லிட்டரை ரூ.4க்கு கொள்முதல் செய்யும் திட்டத்தை முதல்வர் பூபேஷ் பாகல், நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ‘மாட்டு சாணம் கொள்முதல் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கோமியத்தை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இது பூச்சிக் கட்டுப்பாட்டுப் பொருட்கள், திரவ கரிம உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும்,’ என்றார்.

Related Stories: