உடுமலை அருகே சாலை வசதி இல்லாததால் கர்ப்பினியை தொட்டில் கட்டி கிராம மக்கள் மருத்துவமனைக்கு சென்ற அவலம்

திருப்பூர்: உடுமலை அருகே சாலை வசதி இல்லாததால் கர்ப்பினியை தொட்டில் கட்டி கிராம மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வனச்சரகங்களில் உள்ள 18 மலைவாழ் கிராமங்களில் 6000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

தங்களுக்கு சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தர கோரி பல ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் குளிப்பட்டி மலைக்கிராமத்தை சேர்ந்த சரண்யா என்ற கர்ப்பினிக்கு பிரசவ வலி ஏற்படவே அவரை உடனடியாக அப்பகுதி இளைஞர்கள் தொட்டில் கட்டி மலைப் பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் தங்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: