ஆற்றல் அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் சீரமைப்பு

ஈரோடு:ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்துள்ள கணபதிபாளையத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் 4 வகுப்பறை கொண்ட 2 கட்டிடம், சத்துணவு கூடம், கழிப்பறைகள் மற்றும் பள்ளியின் சுற்றுசுவர் சீரமைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளி மாணவ, மாணவிகள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இவ்விழாவில் ஊராட்சி தலைவர் பத்மா வீரமணி, பள்ளியின் தலைமை ஆசிரியர் கிறிஸ்டி கீதா, வார்டு உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கும் நோக்கில் ஆற்றல் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அசோக்குமார் தலைமையில் தொடர் மருத்துவர் பரிசோதனை முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, மொடக்குறிச்சி பகுதிக்குட்பட்ட கணபதிபாளையம், எழுமாத்தூர், புஞ்சை காளமங்கலம், நஞ்சை ஊத்துக்குளி, கண்டிகாட்டுவலசு, வேலம்பாளையம், காகம் மற்றும் குலவிளக்கு ஊராட்சிகளில் ஆற்றல் பவுண்டேஷன் மற்றும் வாசன் ஐ கேர் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தி வருகின்றனர். மக்களின் பொது நலன் கருதி சிறந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ ஆலோசனை, கண் பரிசோதனை மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்படுகிறது. இம்முகாமில் சிறந்த மருத்துவர்கள் மூலம் மருத்துவ ஆலோசனை, மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்படுகிறது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

Related Stories: