ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி திருவாதிரை திருவிழா கோலாகலம்!

அரியலூர் : மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட உலக ப்ரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி திருவாதிரை விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் ஆடி திருவாதிரை அன்று ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி, நேற்று ராஜேந்திர சோழனின் 1051வது பிறந்தநாள் அரசு விழாவாக விமரிசையாக கொண்டாடப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விழாவை தொடங்கி வைத்தார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கலைஞர்கள் மயிலாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம் என கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். இதில் சுற்றுவட்டாரம் மட்டும் அல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். ஆடி திருவதிரையை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.          

Related Stories: