ராஜபாளையத்தில் கழிவுநீரோடையில் குவிக்கப்படும் குப்பை-கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் கழிவுநீரோடைகளில் குப்பைகளை குவிப்பதால், கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவு நீரோடைகளில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், குப்பைகள் குவிந்து கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் தேங்கி அக்கப்பக்கத்தினருக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘நகராட்சி சார்பில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையில் இருந்து மாலை வரை தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ரூ.பல லட்சங்களை செலவு செய்கின்றனர். இந்நிலையில், இரவு நேரங்களில் உணவகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் சேரக்கூடிய கழிவுகளை நீரோடைகளில் தொடர்ந்து கொட்டியும் நீரோடைகளை ஆக்கிரமித்து வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் பயனில்லை. எனவே, கழிவுநீரோடைகளில் குப்பை கொட்டுவோர் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: