மன்னார்குடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் குவிண்டால் பருத்தி ரூ.9,399 க்கு விற்பனை-விவசாயிகள் மகிழ்ச்சி

மன்னார்குடி : மன்னார்குடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக 9399 ரூபாய்க்கு விற்பனையா னது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், கூத்தாநல்லூர், திருத்துறைப் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 6 ஆயி ரத்து 172 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்று தற்போது பஞ்சுகள் அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது..

விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய ஒழுங்கு முறை விற்பனை கூடங்களுக்கு கொண்டு வந்து மறைமுக ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி, திருவாரூர், குட வாசல், வலங்கைமான் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பருத்தி ஏலம் வாரந் தோறும் நடைபெறுகிறது.இந்த நிலையில், மன்னார்குடி ஆர்பி சிவம் பகுதியில் இயங்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த சில வாரங்களாக பருத்தி ஏலம் நடந்து வருகிறது.

இது மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மன்னார்குடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில், கண்காணிப்பாளர் (பொ) செல்வராஜ் ஆகியோர் முன்னிலை யில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது.

இதில் 55 விவசாயிகள் கொண்டு வந்த 120 மூட்டைகளில் பருத்தி பஞ்சுகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.

கும்பகோணம், செம்பனார்கோவில், விருத்தா ச்சலம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை ஏலத்தில் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு குவி ண்டால் பருத்தி .9,399 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.9175 க்கும் விற்பனையானது. இதனால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: