பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா கைது: பெண் எஸ்.ஐ. தலைமையிலான தனிப்படை அதிரடி

சென்னை: நெடுங்குன்றத்தைச் சேர்ந்தபிரபல ரவுடி சூர்யா. இவர் மீது 6 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 33 வழக்குகள் உள்ளன. அதில் 2 வழக்கில் சூர்யாவுக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதால், தலைமறைவானார். அவரை பிடிக்க தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் நெடுங்குன்றம் சூர்யா, வழிப்பறியில் ஈடுபட்டதோடு, கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் நெடுங்குன்றத்தை நோக்கி வருவதாக தகவல் கிடைத்தது. இதனால் எஸ்.ஐ. மேரி சினி கோம் தலைமையிலான தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்ததும், தப்பிச் செல்ல முயன்ற சூர்யாவை, பைக்கில் விரட்டிச் சென்று பிடித்தனர்.

பின்னர் விசாரணைக்காக சங்கர் நகர் காவல்நிலையம் , மறைமலைநகருக்கு அழைத்துச்சென்றனர். அதில், கூலிப்படையினராக செயல்பட்டதோடு, கஞ்சா விற்றதாக கூறப்படுகிறது. பின்னர் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்னர் சூர்யாவை போலீசார் தேடி வந்த நிலையில், பாஜவில் இணைந்தார். பின்னர் அந்த கட்சியில் பட்டியல் அணியில் மாநில இணை செயலாளராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இவரது மனைவி, நெடுங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளியில் வந்த சூர்யா, பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். நெடுங்குன்றம் சூர்யாவை கைது செய்த துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி மற்றும் எஸ்.ஐ., மேரி சினி கோம் மற்றும் 2 காவலர்களை தம்பரம் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.

Related Stories: