மக்கள் தொகை கணக்கெடுப்பினை பொது பட்டியலுக்கு மாற்ற கோரி தீர்மானம்: நாடாளுமன்ற துளிகள்

* மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை ஒன்றிய அரசின் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது தொடர்பாக திமுக எம்பி வில்சன் மாநிலங்களவையில் சிறப்புத் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

* மக்களவையில் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் குறித்து ஒன்றிய கல்விதுறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி அளித்த பதிலில், ‘‘நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 1,162 இடங்களும், மத்திய பிரதேசத்தில் 1,066, கர்நாடகாவில் 1,006 இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. நவோதயா பள்ளிகளில் மொத்தம் 3,156 ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன’’ என்றார்.

* மக்களவையில் பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீடு குறித்து பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட் அளித்த பதிலில், ‘‘கடந்த 2020ம் ஆண்டு பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. அன்னிய நேரடி முதலீட்டில் கொள்கை மாற்றம் காரணமாக கடந்த மே மாதம் வரை இதில் ரூ.494 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது’’ என்றார்.

* மக்களவையில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பதிலில், ‘‘கடந்த 2 ஆண்டுகளில் ராணுவத்தில் மொத்தம் 37,301 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டு வந்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக  ராணுவத்தில் ஆள் சேர்ப்பு  கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது ராணுவத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 484, கடற்படையில் 13,597, விமான படையில் 5,789 வீரர்கள் பற்றாக்குறை உள்ளது’’ என்றார்.

Related Stories: