புழல் காந்தி சாலையில் மின்வாரிய ஆபீஸ் அமைக்க மக்கள் கோரிக்கை

புழல்: புழல் காந்தி சாலையில் மின்வாரிய அலுவலகம் அமைக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 23வது வார்டு புழல் கண்ணப்பசாமி நகர், காவாங்கரை, திருமலை நகர், கன்னடபாளையம், திருநீலகண்ட நகர், சக்திவேல் நகர், பாலாஜி நகர், காஞ்சி அருள் நகர், காந்தி பிரதான சாலை, சிவராஜ் தெரு மற்றும் திருவிக. தெரு உள்பட பல பகுதிகளில் ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதியில் தொழிற்சாலைகளும் உள்ளது.

இப்பகுதியினர் புதிய மின் இணைப்பு மற்றும் மின் பிரச்னை சம்பந்தமாகவும் மின் கட்டணம் கட்டுவதற்காகவும் சுமார் 5 கி.மீ.தூரம் உள்ள பாலவாயல்-சோத்துபாக்கம் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு செல்கின்றனர். அங்கு சென்று பலமணிநேரம் காத்திருந்து மின்கட்டணம் மற்றும் பிரச்னைகளை தீர்க்க காத்திருக்கின்றனர். எனவே புழல் காந்தி பிரதான சாலையில் உள்ள பழைய வருவாய்த்துறை அலுவலகத்தில் மின்சார அலுவலகம் அமைத்து மேற்கண்ட பகுதியில் உள்ளவர்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், ‘’பாலவாயல், சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு செல்வதால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறோம். எனவே, காந்தி சாலையில் உள்ள பழைய வருவாய்த்துறை கட்டிடத்தில் மின்சார வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும். அப்படி செய்தால் மேற்கண்ட பகுதி மக்கள் சிரமமின்றி மின் கட்டணம் செலுத்த முடியும். புதிய மின் இணைப்பு பெறவும் வசதியாக இருக்கும்’ என்றனர்.

Related Stories: