குரூப்-4 தேர்வின் போது குழந்தையை தொட்டில் கட்டி தூங்க வைத்த தந்தை

கோவை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வினை ஆண்களை விட அதிகளவில் பெண்கள் எழுதியுள்ளனர். பாலூட்டும் தாய்மார்கள் சிலர் தங்களின் கை குழந்தைகளுடன் தேர்வெழுத வந்திருந்தனர். இந்நிலையில், கோவை நீலம்பூரில் உள்ள கே.பி.ஆர் கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு கை குழந்தையுடன் வந்த தாய்மார்கள் தேர்வெழுத சென்றனர்.

அவர்களின் தந்தைகள் குழந்தைகளை பார்த்துக்கொண்டனர். அப்போது கே.பி.ஆர் கல்வி நிலைய வளாகத்தில் இருந்த மரத்தடியில் திருப்பதி என்பவர் குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைத்து பார்த்து கொண்டார். இவரின் மனைவி மகேஷ்வரி தேர்வு எழுத சென்று திரும்பி வரும் வரை திருப்பதி கை குழந்தையை தாய் போல பார்த்துக்கொண்டது பலரையும் கவர்ந்தது.

Related Stories: