கிருஷ்ணராயபுரம் பகுதியில் முல்லைப்பூ பறிக்கும் பணியில் பெண்கள் மும்முரம்

கிருஷ்ணராயபுரம் : கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே திருக்காம்புலியூர் பஞ்சாயத்துகுட்பட்ட செக்கனம், எழுதியம்பட்டி பகுதியில் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, அரளி போன்ற பூ வகைகள் சேர்ந்த செடிகள் அதிகளவு வளர்த்து வருகின்றனர். செடிகளில் பூக்கும் பூக்களை நாள்தோறும் பறித்து கரூரில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்று வருகின்றனர். இதன் மூலம் பூச்செடிகள் வளர்த்து வரும் விவசாயிகள் தினம்தோறும் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

மல்லிகை பூக்கள், ஜாலிமல்லி, முல்லைப் பூக்கள் போன்ற பூக்கள் திருமண முகூர்த்த நேரங்களில் ஒரு கிலோ பூக்கள் ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வரை விலை போகும். மற்ற நாட்களில் ஒரு கிலோ ரூ.250 முதல் 500 ரூபாய் வரை விலை போகும் என்று தெரிவித்தனர்.தற்போது பூக்கள் விளைச்சல் அதிகளவில் உள்ளதால் பூந்தோட்டத்தில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்யும் பூ மார்க்கெட்டிற்கு சில்லரை வியாபாரிகள் சென்று தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி வந்து அவற்றை வீடுகளில் வைத்து தொடுத்து தெருத்தெருவாக விற்று வருகின்றனர். மேலும் கடைவீதியில் சிறிய அளவில் பூக்கடைகள் போட்டும் விற்று வருகின்றனர்.

தற்போது ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அதிகளவில் பூக்கள் விற்பனையாகும். ஆடி மாதத்தின் மற்ற நாட்களிலும் கோயிலுக்கும், வீடுகளில் சுவாமிக்கும் பூக்கள் வாங்கி செல்வதால் கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார மக்களுக்கு தொடர்ந்து வேலைகள் கிடைப்பதாக இப்பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: