காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உழவாரப் பணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் குழுவினர் மூலம் உழவாரப்பணி நேற்று நடைபெற்றது. இந்தப் பணியை கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்தார்,

காஞ்சிபுரத்தில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பிரசித்தி பெற்ற வைணவத் , திருத்தலமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அமைப்பின் தலைவர் கணேஷ் தலைமையில் இந்த உழவாரப் பணி நடைபெற்றது. அத்திவரதர்  சயன நிலையில் நீருக்கடியில் உள்ள திருக்குளம், கோயில் உள்பிரகாரம், வெளிப் பிரகாரம், கோயில் நுழைவாயில் மற்றும் கொடிமரம் உள்ளிட்ட பகுதிகளில் உழவாரப் பணியினர் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாலை கோயில் வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்பணர்வுப் பேரணியும், கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Related Stories: