அழகுமுத்து அய்யனார் ஆலய ஆடிதிருவிழா

கடலூர்: கடலூர் வெளிச்செம்மண்டலத்தில் உள்ள அழகுமுத்து ஐயனார் ஆலயத்தில் ஆடிமாத திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆலயத்தில் அழகுமுத்து ஐயனாருக்கும், பூரணி பொற்களை தேவியர்களுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருமண தடையாக உள்ள கன்னியர்கள் தேவியர்களுக்கு திருமாங்கல்யத்தை ஒவ்வொரு முடிச்சு போட்டு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கடலூர் மாநகராட்சி மூன்றாவது வார்டு உறுப்பினர் பிரகாஷ் அருணாசலம்  விருந்து வழங்கி உபசரித்தார். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி சாமி. புகழேந்தி செய்திருந்தார்.

Related Stories: