ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருவள்ளூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு பெரியபாளையம் அருகே சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சிறுவாபுரி கிராமத்தில் அருள்மிகு பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வியாபார வளர்ச்சி, அரசியல் பதவி, ரியல் எஸ்டேட், திருமண தடை, குழந்தை பேறு போன்ற பல்வேறு தேவைகளுக்காக 6 செவ்வாய்கிழமைகளில் தொடர்சியாக வந்து இங்கு விளக்கேற்றி வழிபாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி சிறுவாபுரி முருகன் கோவிலில் 19ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சிறுவாபுரி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து சென்றனர். கோவிலின் பின்புறம் உள்ள அரசு மரத்தில் பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி தொட்டில் கட்டியும், தீபமேற்றியும் நேர்த்தி கடனை செலுத்தினர்.மேலும் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து கிராமத்தை வலம் வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வகைப்பட்டு சென்றனர்.

Related Stories: