44வது ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு நீச்சல் குளத்தில் செஸ் போட்டி-தாலுகா அலுவலகம், பள்ளி வளாகங்களில் ஓவியம்

பெரம்பலூர் : நீச்சல் குளத்தில் செஸ் போட்டி. தாலுகா அலுவலகம், பள்ளி வளாகங்களில் ஓவியம். 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டிக்காக பெரம்பலூர் மாவட்டமே உற்சாகமடைந்துள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10வரை மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. உலகஅளவில் நடைபெறக்கூடிய செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடப்பது இதுவே முதன்முறை. 188 நாடுகளைச்சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபெறும் அளவில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தமிழ்நாட்டில் தமிழக அரசின் ஏற்பாட்டில் நடத்தப்படுவது நாம்அனை வருக்கும் பெருமை தரக்கூடிய செய் தியாகும்.

இத்தகு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண் டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களி லும் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. பெ ரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முயற் சியாக நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல்குளத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்ற படி 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மிதவை ரப்பர் மேல் சதுரங்கப் பலகையை வைத்து ஆர்வமாக விளையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.மேலும் வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூர் அரசு ஆண்கள் தொடக்கப் பள்ளியின் மைதானத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் மரியஜோசப் ஏற்பாட்டில் மாணவ மாணவியர் பிரமாண்ட சதுரங்க பலகையை கருப்பு வெள்ளை நிறத்தில் வரைந்து மாணவ,மாணவியருக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதே போல பல்வேறு அரசுப்பள்ளிகளில் செஸ் போட்டி குறித்து விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டன.

அதேபோல் புது முயற்சியாக அரசுப் பள்ளிகளில் பணியாற்ற கூடிய திறமை வாய்ந்த ஓவிய ஆசிரியர்கள் தன்னார்வமாக வருகை தந்து பெரம்பலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் திரீ-டி எனப்படும் முப் பரிமாண ஓவியங்கள் அமோனைட்ஸ் மையத்தின் முன்பு வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களை அரசுப் பள்ளி ஓவியஆசிரியர்களா ன பாடாலூர் பள்ளி வேல் முருகன் தலைமையில் ஓ விய ஆசிரியர்கள் பெரம்பலூர் ஜேசுதாஸ், செல்வகுமார் உள்ளிட்ட 12அரசுப்பள்ளி ஓவிய ஆசிரியர்கள் 15ம்தேதி முதல் பணிகளை தொடங்கி இந்த முப்பரிமாண ஓவியத்தினை வரைந்துள்ளனர்.

Related Stories: