சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் 3டி ஸ்கேன் மூலம் கைரேகை தடயங்கள் சேகரிப்பு

சின்னசேலம்: சின்னசேலம்  அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மதி(17) மர்மான முறையில் உயிரிழந்தார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கடந்த 17ந்தேதி  மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பள்ளி சூறையாடப்பட்டது. இது தொடர்பாக தற்போது சிபிசிஐடி விசாரணை  நடந்து வருகிறது.

   

இந்நிலையில் நான்காவது நாளாக  தடயவியல் துறை உதவி இயக்குனர் சண்முகம் தலைமையில் அவரது குழுவினர்  பள்ளி வளாகத்தில் வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்த போலீஸ் வேன் மற்றும் பள்ளி பேருந்துகளை எரித்த விதம் குறித்தும் அதிலிருந்த தடயங்களை குறித்தும் ஆய்வு செய்தனர்.

அதில் ஆயுதங்கள் மூலம் சேதப்படுத்தி தீ வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சேதம் அடைந்த இடங்களில் கண்ணுக்குத் தெரியாத கை ரேகை தடயங்களை 3டி ஸ்கேன் மூலம் சுமார் 2 மணி நேரமாக கைரேகை நிபுணர் குழுவினர் சேகரித்தனர். சென்னை சைபர் கிரைம் எஸ்பி சண்முகபிரியா தலைமையில் குழுவினர் சமூக வலைதளத்தின் மூலம் கலவரக்காரர்களை ஒன்று திரட்டிய விவகாரம் குறித்து ஆதாரங்களை சேகரித்து வருகிறன்றனர்.

மாணவி கிராமத்தில் 800 போலீசார் குவிப்பு: மாணவி |மதி சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தில் இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க வெளியூர்களிலிருந்து பெரியநெசலூர் கிராமத்திற்கு இறுதிச்சடங்கில் பங்கேற்க வருபவர்களுக்கு அனுமதி இல்லை.  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ் தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் அந்த கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: