5 தேசிய விருதுகளை சூறையாடிய ‘சூரரைப் போற்று’ திரைப்படம்...சூர்யாவுக்கு சிறந்த பிறந்த நாள் பரிசு என ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: நடிகர் சூர்யா நாளை தனது 47- வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது  அவருக்கான மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூரரைப் போற்று திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை நடிகர் சூர்யா தனது 2D Entertainment என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்தார்.

திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களை சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்தனர். மேலும் ஊர்வசி, மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகியோர் துணை கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் வானூர்தி நிறுவனத்தைத் துவக்கியவரான கோ. ரா. கோபிநாத்த்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் வெளியானபோது பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.  

இந்த நிலையில், இன்று டெல்லியில் 68-வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த திரைக்கதைக்கான 5 விருதையும் சூரரைப் போற்று திரைப்படம் தட்டிச்சென்றுள்ளது. இந்தநிலையில், நடிகர் சூரியாவுக்கான மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூரரைப்போற்று படத்துக்கு தேசிய விருதுகள் பெற்ற நடிகர் சூர்யா, இயக்குநர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவுக்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: