மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம் ஊராட்சிகளில் நியாய விலை கடைகளை எம்எல்ஏ திறந்து வைத்தார்

கூடுவாஞ்சேரி: மண்ணிவாக்கம் மற்றும் ஊரப்பாக்கம் ஊராட்சிகளில் ரேஷன் கடைகளை வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது கே.கே. நகர் பகுதி. இதேபோன்று, ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட 5வது வார்டு வி.பி.கே நகர் உள்ளது. இந்த ஊராட்சிகளில் உள்ள மக்கள், தங்களுக்கு ரேஷன் கடைகள் அமைத்து தர வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்தனர்.

அதனை தொடர்ந்து, இரண்டு ஊராட்சிகளிலும்  ரேஷன் கடைகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், கடந்த மாதம் இந்த ஊராட்சிகளில்  புதிய ரேஷன் கடைகள்  கட்டி முடிக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணிவாக்கம் கெஜலட்சுமிசண்முகம், ஊரப்பாக்கம் பவானிகார்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

துணை தலைவர்கள் சுமதி லோகநாதன், ரேகா கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர்கள் சோமசுந்தரம், ஜே.கே.தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஆராமுதன் ஆகியோர் கலந்துகொண்டு மண்ணிவாக்கம் மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட நியாயவிலை கடைகளை திறந்து வைத்தனர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.

திமுக ஒன்றிய பொருப்பு குழு உறுப்பினர்கள் ஜே.வி.எஸ்.ரங்கநாதன், அஞ்சூர் ராஜேந்திரன், ஓட்டேரி குணா, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கருணாகரன், இளைஞரணி அமைப்பாளர் ஏ.வி.எம்.இளங்கோவன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இறுதியில், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ் கார்த்திக் நன்றி கூறினார்.

Related Stories: