நீர்பிடிப்பில் மழை நின்றதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது

கூடலூர்: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை நின்றதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 135.75 அடியாக இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த  சில நாட்களாக பெய்து வந்த மழை நேற்று முதல் முற்றிலும் நின்றுபோனது. இதனால்  கடந்த 15ம் தேதி 8,143 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக  குறைந்து நேற்று வினாடிக்கு 1,448 கனஅடியாக சரிந்தது.

அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1,885 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 6,055 மில்லியன் கன அடியாக உள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 58.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,813 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 969 கனஅடியாகவும் உள்ளது.

அணையின் இருப்பு நீர் 3,324 மில்லியன் கன அடியாக உள்ளது. 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.35 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 3 கனஅடியாகவும் உள்ளது. அணையின் இருப்பு நீர் 30.39 மில்லியன் கனஅடியாக உள்ளது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.35 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 கனஅடியாக இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை. அணையின் இருப்புநீர் 327.18 மில்லியன் கனஅடியாக உள்ளது. மழை எங்கும் பதிவாகவில்லை.

மின் உற்பத்திக்கு தண்ணீர் திறப்பு பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு திறக்கப்படும் 1,885 கனஅடி தண்ணீரில் 200 கனஅடி குமுளி மலைச்சாலையிலுள்ள போர்பை டேமில் இருந்து இரைச்சல் பாலம் வழியாக திறக்கப்படுகிறது. மீதமுள்ள 1,685 கனஅடி தண்ணீர் நான்கு ராட்சத பென்ஸ்டாக் பைப் வழியாக மின் உற்பத்திக்கு திறக்கப்படுகிறது. இந்த 1,685 கனஅடி தண்ணீரில் பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்கு இயந்திரங்கள் மூலம் 152 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

Related Stories: