அனைத்து வழக்கிலும் ஜூபைருக்கு ஜாமீன்

புதுடெல்லி: செய்திகளின் உண்மைத்தன்மை கண்டறியும் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர், கடந்த 2018ல் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் வெளியிட்ட டிவிட்டர் பதிவுக்காக கடந்த மாதம் 27ம் தேதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே உபி போலீசார் பல்வேறு டிவிட்கள் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

 இவை அனைத்திலும் ஜாமீன் வழங்கக் கோரி ஜூபைர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மனுதாரரை இனியும் சிறையில் அடைத்து வைப்பதில் எந்த நியாயமும் இல்லை. அவர் எந்த டிவிட்டும் போடக் கூடாது என தடை விதிக்க முடியாது’ என கூறி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

Related Stories: