விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மூவர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நேற்று இரவு சுமார் 9.45 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், பிரம்மதேசம் கிராம எல்லை பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் வைத்திருந்த மின்கம்பியில் சிக்கி வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ் (வயது 45), வெங்கடேஷ் (வயது 44) மற்றும் மகன் சுப்பிரமணி (வயது 40) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

     

இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories: