சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

கூடுவாஞ்சேரி: நந்திவரம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரத்தில் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இங்கு, மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள, 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று முன்தினம் நடந்தது. இதில், மாணவ, மாணவியரின் சைக்கிள் பேரணி நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கியது. சைக்கிள் பேரணியை நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி கொடி அசைத்து வைத்து தொடங்கி வைத்தார்.

உடன் துணை தலைவர் ஜி.கே.லோகநாதன், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரிபிரேம்குமார், நாட்டு நல பணி திட்ட அலுவலர் தயாளன், பள்ளி மேலாண்மை குழுவை சேர்ந்த தேவி, ஜமுனா ஆகியோர கலந்துகொண்டனர். இந்த, சைக்கிள் பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கி நெல்லிக்குப்பம் சாலை வழியாக திரவுபதி அம்மன் கோயில் தெரு மற்றும் நந்திஸ்வரர் கோயில் அருகே ஜிஎஸ்டி சாலையை வந்தடைந்து. பின்பு பள்ளி வளாகத்தை சென்றடைந்தனர். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

Related Stories: