கரூர் ராயனூர் அருகே பாதுகாப்பு இல்லாத மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கரூர் : கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் அருகே பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் இருந்து செல்லாண்டிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையோரம் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இங்கிருந்து பல்வேறு குடியிருப்புகளுக்கு தொட்டி மூலம் குடிநீர் தேக்கி வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தொட்டியின் அருகில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. மேலும், சிறுவர்கள் வந்து செல்லும் அங்கன்வாடி மையமும் அருகிலேயே உள்ளது. மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி இருக்கும் வளாகத்திற்குள் அனைவரும் எளிதில் செல்லும் வகையில் உள்ளது. பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் அவ்வப்போது ஏராளமானோர் படிகளின் வழியாக நீர்தேக்கத்தொட்டியின் மேலே ஏறிச் செல்வது போன்ற நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. அருகிலேயே நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளியும் உள்ளது. ஆனால், எந்தவித பாதுகாப்பும் இன்றி மேல்நிலை தொட்டி வளாகம் உள்ளது. எனவே, அனைவரின் பாதுகாப்பு கருதி தொட்டி வளாகத்தை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: