தமிழகத்தில் புதிய மணல் குவாரிகளை அனுமதிக்க கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் புதிய மணல் குவாரிகளை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தற்போது 25க்கும் கூடுதலான மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் இருந்து ஒரு நாளைக்கு அதிகாரப்பூர்வமாக 13 ஆயிரம் லாரி லோடு ஆற்று மணல் அள்ளப்படுகிறது. ஆனால், இவை போதுமானவையாக இல்லை என்று கூறி கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் புதிதாக 9 மணல் குவாரிகளை அமைக்கவும், மாட்டு வண்டிகளில் மட்டும் மனித சக்தியைக் கொண்டு மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட 30 மணல் குவாரிகளில் எந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளவும் அனுமதி கோரி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் நீர்வளத்துறை கடந்த 6 மாதங்களில் விண்ணப்பம் செய்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகளை திறப்பது, எந்திரங்களைக் கொண்டு மணல் அள்ள அனுமதிப்பது போன்ற முடிவுகளை தமிழக அரசு கைவிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும். புதிய மணல் குவாரிகளை திறக்க முயன்றால் பாமக சார்பில் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: