ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஆன்மீக புத்தக நிலையம்

திருச்சி: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஆன்மீக புத்தக நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களின் அறிவுரையின்படி திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் பக்தர்களின் வசதிக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 108 திவ்ய தேசங்களில் முதன்மைத் திருக்கோயிலான அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் ஸ்ரீரெங்க விலாச மண்டபத்தில் ஆன்மீக புத்தக விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

இப்புத்தக விற்பனை நிலையத்தில் திருக்கோயிலை பற்றிய வரலாறு (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) அரங்கமா நகருளானே, காரோய் கருணை ராமானுஜர், திருச்சிராப்பள்ளி  வழிகாட்டி நூல், அன்னைத்தமிழ் அர்ச்சனை போற்றி, பூலோக வைகுண்டம், Soft bound. Srirangam Art Architecture, ஸ்ரீமத்பகவத் கீதை ஆகிய ஆன்மீக நூல்கள் விற்பனைக்கு உள்ளன. இத்திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் புத்தக விற்பனை நிலையத்தில் ரூ.50 முதல் இயன்றவரை வழங்கி ரசீது பெற்று கொள்ளலாம்.

Related Stories: