சட்டீஸ்கர் காங்.கில் குழப்பம் முதல்வருடன் மோதல் அமைச்சர் ராஜினாமா

ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல்வருடனான மோதல் காரணமாக சிங் தியோ அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வர் பதவியை தனக்கு ஒதுக்கும்படி மூத்த அமைச்சர் தியோ சிங் போர்க்கொடி தூக்கி உள்ளார். பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற மேம்பாட்டு துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மருத்துக் கல்வி துறை, 20 அம்ச திட்டங்களின் செயல்பாடுகள் துறை, வணிக வரித்துறை (ஜிஎஸ்டி) ஆகியவற்றுக்கு சிங் தியோ அமைச்சராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், சிங் தியோ பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் முதல்வருக்கு அனுப்பிய 4 பக்க ராஜினாமா கடிதத்தில், `ஏழை மக்களின் நலனுக்கான பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படாததால், ஒருவருக்கு கூட வீடு கட்டி கொடுக்கவில்லை. மேலும், மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை,’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், ஊடகங்கள் மூலமே அவரது ராஜினாமா குறித்து தெரிய வந்ததாகவும் அமைச்சரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் முதல்வர் கூறினார்.

Related Stories: