ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மேலும் 21 பேர் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மேலும் 21 பேரை எடப்பாடி பழனிசாமி நீக்கி நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிமுகவின் கொள்கைகளுக்கும், குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் சுப்புரத்தினம் (அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர்), மாறன் (ஜெயலலிதா பேரவை துணை செயலாளர்), சிவில் ஆ.முருகேசன் (இலக்கிய அணி துணை செயலாளர்) மற்றும் தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயதேவி (மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்), திருவள்ளூர் மத்திய மாவட்டத்தை சேர்ந்த வளசை மஞ்சுளா பழனிச்சாமி (மாவட்ட மகளிர் அணி செயலாளர்), வேலூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்பாபு (பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர்), திருநாவுக்கரசு, (பேரணாம்பட்டு கிழக்கு ஒன்றிய துணை செயலாளர்),

திருச்சி மாநகர் மாவட்டத்தை சேர்ந்த ஜவகர் (வெல்லமண்டி நடராஜன் மகன்), தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த தயாளன் (ஜெயலலிதா பேரவை செயலாளர்), சரவணன் (மாவட்ட மாணவர் அணி செயலாளர்), பசுவை சதீஷ் (மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்), செந்தில் (கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர்), பாண்டியன் (டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க துணைத்தலைவர்), பாலமுருகன் (மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர்), ஹரிகிருஷ்ணன், (மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்), சிவக்குமார் (கும்பகோணம் மேற்கு ஒன்றிய துணை செயலாளர்), சுகுமாரன் (கும்பகோணம் மேற்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர்), பரத் (கும்பகோணம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்), சதீஷ் (கும்பகோணம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்), சதீஷ்ராஜ் (திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர்), கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த நாஞ்சில் கோலப்பன் (மாவட்ட எம்ஜிஆர் மன்ற முன்னாள் செயலாளர்) ஆகியோர் இன்று (நேற்று) முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: