சிவகங்கை அரசு மருத்துவமனையில் இயற்கை மூலிகை செடிகளை கொண்டு தோட்டம் அமைத்து விழிப்புணர்வு ஏற்பாடு

சிவகங்கை: பொதுமக்களிடம் இயற்கை மூலிகை செடிகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவத்திற்கு என தனிப்பட்ட பிரிவு உருவாக்கப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 அவர்களுக்கு தேவையான மருந்துகள் வெளியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட மாவட்டத்தில் உள்ள 18 அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் திருநீற்றுப்பச்சிலை,ஆடா தொடை,ஆமணக்கு, நெல்லி,ஓமவள்ளி உள்ளிட்ட 25 வகையான மூலிகைகள் கொண்ட தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மூலிகை செடிகள் குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் மக்கள் தெரிந்துகொண்டால் அவர்களே தங்களது நோய்க்கு தேவையான மருந்துகளை எடுத்து கொள்ள முடியும். அதற்காகவே இந்த மூலிகை தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூலிகை செடிகளின் பெயர் அதன் அறிவியல் பெயர் மற்றும் அதன் பயன் குறித்து செடியின் அடிபகுதியிலேயெ குறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் நோயாளிகளிடையே மூலிகை செடிகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். அரசு இந்த முயற்சி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Related Stories: