தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது பற்றிஅமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

இராமநாதபுரம்: தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு மீண்டும்  கப்பல் போக்குவரத்து தொடங்குவது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று சிறு துறைமுகங்கள் துறைஅமைச்சர்  எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார்.

இராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் இரயில்வே தூக்குபாலம் வழியாக சிறிய சரக்கு கப்பல்கள்  சென்று வர ஏதுவாக கடலுக்கு அடியில் 10  மீட்டர்  ஆழப்படுத்துவதற்காக சாத்திய கூறுகள் பற்றி அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். சாகர்மாலா திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு 100 சதவீதம் மானியங்கள் வழங்கினால் சிறிய சரக்கு  கப்பல்கள் பாம்பன் ரயில்வே தூக்கு பாலம் வழியாக செல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அதனை தொடர்ந்து இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் பகுதியில் சுற்றுலா பயனிகளுக்காக நடத்தப்பட்டு வரும்  படகு போக்குவரத்தை விரிவுபடுத்துவதாகவும், இராமேஸ்வரம் துறை முகத்துக்கு புதிய நிர்வாக அலுவலகம் ஒன்று அமைக்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த  இராமேஸ்வரம் - தலைமன்னார்  கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்காகவும் ஆய்வு செய்ய வந்ததாக தெரிவித்துள்ளார்.

பாக் நீரினை பகுதியில் கடலை ஆழப்படுத்துவற்காகவும் செலவு குறித்து திட்டம் மதிப்பீட்டு பணிகளுக்கு பிறகு தெரிய வரும் என்று அமைச்சர் கூறினார். ஊர்வாங்க பணிகளுக்கு பிறகு ஒன்றிய அரசிடம் இதன் தொடர்பாக விளக்கம் அளித்து உரிய நிதியை பெற்று நடவடிக்கைகள் எடுக்க பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: