தொடர்மழையால் குமுளி மலைச்சாலையில் மண்சரிவு

கூடலூர்: தொடர் மழையால் குமுளி மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பபட்டது.தேனி மாவட்டம் தமிழக, கேரள எல்லைப் பகுதியான குமுளிக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தேனி-கொல்லம் நெடுஞ்சாலையில் லோயர் கேம்ப்பிலிருந்து 6 கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலைச்சாலையில் செல்கிறது. தேக்கடி, வாகமன் சுற்றுலா செல்லும் சுற்றுலா வாகனங்களும், குமுளிக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களும், கேரளா செல்லும் சரக்கு வாகனங்களும், நாள்தோறும் கூலித்தொழிலாளர்களுடன் கேரளா செல்லும் வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியே செல்கிறது.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தொடர்மழையால் நேற்று முன்தினம் இரவு குமுளி மலைச்சாலையில் மாதா கோயிலுக்கு மேல் எஸ் வளைவில் மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிவு சிறிய அளவில் ஏற்பட்டதால் வாகனப்போக்குவரத்திற்கு தடை ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற லோயர் போலீசார் பணியாளர்கள் மூலம் மண்ணை ஒருபுறமாக ஒதுக்கினர்.

Related Stories: