காங். முன்னாள் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் ஏற்பாட்டில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஒன்றிய, மாநில முன்னாள் அமைச்சருமான  சு.திருநாவுக்கரசர்  பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை  முன்னிட்டு அரும்பாக்கம் பழைய பஸ் நிலையம், திருவீதி அம்மன் கோயில் தெருவில் நாளை மாலை 6 மணி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் தலைமையில் நடக்கிறது. மாநில பொதுச்செயலாளர் (ஆர்டிஐ) பிரிவு முகப்பேர் மதன்பாலு முன்னிலை வகிக்கிறார்.

இதில், காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் செல்வபெருந்தகை, விஷ்ணுபிரசாத் எம்பி, முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண், கன்னியாகுமரி எம்பி விஜய்வசந்த், காங்கிரஸ் துணை தலைவர்கள் நாசே.ராமச்சந்திரன், சொர்ணாசேதுராமன், பொதுச்செயலாளர்கள் அருள்பெத்தையா, ஜோதிராமலிங்கம், பேச்சாளர்கள் குமரி மகாதேவன், சூளை ராமலிங்கம் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். காலையில் அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோயில் தெருவில் உள்ள கக்கன் ஜி பவனில் ஆர்பிஎஸ் மருத்துவமனை, சென்னை லீவர் பவுண்டேசன் இணைந்து நடந்தும் சிறப்பு  மருத்துவ முகாம்  காலை   7 மணி  முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும்.

நிகழ்ச்சியை மாவட்ட துணை தலைவர்கள் மோகனரங்கம், கணபதி, சுரேஷ்குமார், மிதுன் சக்கரவர்த்தி, இளைஞர் காங்கிரஸ் எஸ்.தமிழ்அரசன் ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர். சென்னை மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ஆர்.கார்த்திகேயன் விழாவை சிறப்பிக்கிறார். சென்னை மாவட்ட காங்கிரஸ்  மூத்த முன்னோடிகள், தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.

Related Stories: