எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை இழக்கும் ஓபிஎஸ்: புதிய துணை தலைவராக வேலுமணி தேர்வாகிறார்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் ஓ.பன்னீர்செல்வம் இழக்கிறார். புதிய துணை தலைவராக எஸ்.பி.வேலுமணி தேர்வாகிறார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுகவின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது, ஓபிஎஸ் தமிழக சட்டமன்ற பேரவையின் எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்கிறார். அதிமுக கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளதால், அவர் எந்த கட்சியும் சாராத எம்எல்ஏவாகவே கருதப்படுவார். அதனால் இனி அவர் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் நீடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக கட்சி சார்பில் சட்டப்பேரவை செயலாளரிடம் நேற்று மாலை முறைப்படி இதற்கான கடிதமும் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி, அதிமுக கொறடாவாக உள்ள எஸ்.பி. வேலுமணிக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அவர் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆனதும் அதிமுக சார்பில் புதிய கொறடா நியமிக்கப்படுவார்.

Related Stories: