விடுமுறை தினமான நேற்று ஏலகிரி மலையில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலை சுற்றுலா தலத்தில் வார விடுமுறையான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து பல்வேறு பொழுதுபோக்குக்கூடங்களை குடும்பத்துடன் கண்டு களித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை விழா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. நான்கு புறமும் மலைகளால் சூழப்பட்டு 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

மேலும் எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷன நிலை நிலவுவதால் ஏலகிரி மலை சுற்றுலாத்தலம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. மேலும் இங்கு இயற்கை பூங்கா, படகு துறை, சிறுவர், பூங்கா வைல்டு தீம் பார்க், பேர்ட்ஸ் பார்க், மூலிகை பண்ணை, முருகன் கோயில் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மட்டுமின்றி அதிக அளவில் தனியார் பொழுதுபோக்கு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பொழுதுபோக்கு இடங்களை கண்டு களித்து மகிழ்கின்றனர்.

இந்நிலையில் வார விடுமுறையான நேற்று கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பேருந்துகளிலும், கார், பைக் போன்ற வாகனங்களிலும் ஏலகிரி மலையில் குவிந்தனர். மேலும் இங்குள்ள பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை கண்டு களித்தும் படகு துறையில் சவாரி செய்தும், வைல்டு தீம் பார்க்கில் உள்ள செயற்கை நீர்வீழ்ச்சியிலும், செயற்கை அலையிலும்  குடும்பத்துடன் நீர்வீழ்ச்சியில் நீராடி மகிழ்ந்தனர்.

இதனையடுத்து சிறுவர் பூங்காவில் உள்ள ஊஞ்சல்களிலும் குழந்தைகளை விளையாட செய்து மகிழ்ந்தனர். மேலும் இது மட்டும் அல்லாமல் இங்குள்ள பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களையும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர். மேலும் வார விடுமுறையால் நேற்று சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிப்பால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி ஏலகிரி மலை காவல் நிலைய போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டும் சோதனை சாவடி மையங்களில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.

Related Stories: