மயிலாடுதுறை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

மயிலாடுதுறை : ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10ம் நாள் பக்ரீத் கொண்டாடப்படுகின்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை கூறைநாடு பெரிய பள்ளிவாசல், நீடுர், தேரிழந்தூர், வடகரை, கிளியனூர், அரங்கக்குடி, சங்கரன்பந்தல், ஆக்கூர், சோழசக்கரநல்லூர், உட்பட 37 பள்ளிவாசல்களில் சிறப்புத்தொழுகையிம், சீனிவாசபுரம் உட்பட 15 இடங்களில் தவ்ஹீது ஜமாஅத் சார்பில்திடல் தொழுகையும் நடைபெற்றது.

 இத்தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு வாழ்வில் வளமோடு ஒற்றுமை உணர்வோடு சிறப்புற்று வாழவும் தொழுகை நடத்தினர். பின்னர்,தொழுகை முடிந்ததும் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் செல்போனில் செல்பி எடுத்தும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி எல் எம் சி பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏற்பாட்டில் இஸ்லாமிய நல்லிணக்க மையம் சீர்காழி நகரம் நடத்தும் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் இஸ்லாமிய பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர், பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர் இதேபோல் திருமுல்லைவாசல் வடகால் பெருந்தோட்டம் மணி கிராமம் கோயில் பத்து சேந்தங்குடி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் திறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் பக்ரீத் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் ஜாமி ஆ மஸ்ஜித் மற்றும் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த பண்டிகையானது வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்ராஹீம் நபி தான் கண்ட கனவின்படி தனது மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிட துணிந்தார்கள் அப்போது வந்த இறைக்கட்டளை மகனை அறுக்க வேண்டாம் என்றும்,அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறைவனுக்காக பலியிடுமாறும் கூறப்பட்டது.அதன்படியே இஸ்லாமியர்கள் தங்களது குர்பான் கடமையை நிறைவேற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: