கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொழிலதிபர் செந்தில்குமாரின் சென்னை வீட்டில் அதிரடி சோதனை

கோவை: கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக சென்னையில் தொழிலதிபர் செந்தில்குமார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார், மணல் சப்ளையர் ஓ.ஆறுமுகசாமி மற்றும் அவர் மகனும் தொழிலதிபருமான செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். செந்தில்குமாரிடம் நேற்று 3வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. அவரது உதவியாளர் பழனிச்சாமி என்பவரிடமும் விசாரணை நடத்தினர். 2 பேரிடமும் போலீசார் தனித்தனியாக பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஓ. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மணல் தொழிலில் அசைக்க முடியாத சக்தியாக ஆறுமுகசாமி இருந்தார். ஜெயலலிதா இறந்த பின்னர், சசிகலா சிறை சென்ற பிறகு ஓ.ஆறுமுகசாமி ஓரம் கட்டப்பட்டார். ஆனால் அவர் அரசியல் அதிகார மையங்களுடன் இருந்த காலத்தில் கொடநாட்டில் எஸ்டேட் வாங்கியிருப்பதாக தெரிகிறது.

ஜெயலலிதாவின் எஸ்டேட் பங்களாவில் இருந்த ஆவணங்கள், ஓ. ஆறுமுகசாமியின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டு அவரிடம் ரகசியமான இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவல்களை உறுதி செய்யவே அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமார், பழனிச்சாமி ஆகியோர் கொடநாடு எஸ்டேட் தொடர்பாக பல்வேறு ஆதாரங்களை கொடுத்துள்ளதாக தெரிகிறது.  செந்தில்குமாரிடம் விசாரணை நடத்திவரும் நிலையில் சென்னை சிஐடி காலனி, ஷைலி நிவாஸ் அபார்ட்மென்ட்டில் உள்ள அவரது வீட்டில் கோவை சரக டிஐஜி முத்துசாமி தலைமையிலான மற்றொரு குழுவினர் நேற்று சோதனை நடத்தினர்

Related Stories: