வெளிநாட்டு ராணுவ கொள்முதல் 3 தனியார் வங்கிகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: தனியார் துறை வங்கிகளுக்கு வெளிநாட்டு கொள்முதல் நிதி சேவைகளை வழங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ராணுவத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களுக்கு தேவையான நிதி, வங்கி உத்தரவாதம் போன்றவை தற்போது பொதுத்துறை வங்கிகள் மூலமாக மட்டுமே பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுபோன்ற கொள்முதலுக்கான கடன் உத்தரவாத கடிதம், நேரடி வங்கி பரிமாற்றங்களை செய்வதற்கு ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் ஆகிய மூன்று தனியார் துறை வங்கிகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி  அளித்துள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தானது. இந்த வங்கிகள் மூலமாக, முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி வரையிலான வணிகம் செய்யப்பட உள்ளது. இவற்றின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவைப்பட்டால் இந்த தொகையின் அளவு அதிகரிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: